ஜெயலலிதா இறந்த அதிர்ச்சியில் 60 பேர் மரணம் : 6 பேர் தற்கொலை! அதிர்ச்சியில் தமிழகம்..

271

jeya1

தமிழக முதல்வர் ஜெயலலிதா இறந்த செய்தி கேட்ட அதிர்ச்சியில் அ.தி.மு.கவின் தொண்டர்கள் ஆண்கள், பெண்கள் என 60 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

50 வயதிற்கும் மேற்பட்டோரே உயிரிழந்தவர்களுள் பெரும்பாலானோர் என்றும் அந்தச் செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே அ.தி.மு.கவினர் 6 பேர் தற்கொலைசெய்துகொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.

தர்மபுரி, நெல்லை, சேலம், கிருஸ்ணகிரி, தஞ்சை, நாகை, நீலகிரி, மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், வேலூர் ஆகிய மாவட்டங்கள் உள்ளிட்ட மேலும் சிலபகுதிகளில் பகல் இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்களுள் 25 வயது முதல் 35 வயதுக்கிடைப்பட்டவர்களும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியில் தமிழகம் முழுவதும் 19 பேர் உயிரிழந்துள்ளதாக ஏற்கனவே செய்தி வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE