
ஏ.எல்.விஜய் இயக்கும் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்க வித்யாபாலனை தேர்வு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கும் வித்யா பாலன் ஏற்கனவே வாழ்க்கை கதை படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது தெலுங்கில் தயாராகி உள்ள என்.டி.ராமராவ் வாழ்க்கை வரலாறு படத்தில் அவரது மனைவி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஜெயலலிதா வாழ்க்கை கதை படத்தில் தோழி சசிகலா வேடத்தில் நடிக்கப்போவது யார்? என்ற பரபரப்பான எதிர்பார்ப்பு நிலவியது.
தற்போது சாய்பல்லவியை சசிகலா வேடத்துக்கு விஜய் தேர்வு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் பிரேமம் மலையாள படத்தில் நடித்து பிரபலமானார். விஜய் இயக்கிய தியா படத்திலும் நடித்து இருந்தார். தனுஷ் ஜோடியாக நடித்த மாரி–2 படம் திரைக்கு வந்துள்ளது. ஜெயலலிதா சினிமாவில் அறிமுகமானதில் இருந்து அரசியலுக்கு வந்து முதல்–அமைச்சர் ஆனது வரை உள்ள சம்பவங்களை படத்தில் காட்சிபடுத்துகின்றனர்.