ஜெர்மனி கால்பந்து அணியின் கேப்டன் ஓய்வு

261

பெர்லின்,

ஜெர்மனி கால்பந்து அணியின் கேப்டன் பாஸ்டியன் ஸ்வெய்ன்ஸ்டீகர் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். சமீபத்தில் நடந்த ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டியில் உடல் தகுதி பிரச்சினையுடன் பங்கேற்ற 31 வயதான பாஸ்டியன் ஸ்வெய்ன்ஸ்டீகர் பிரான்ஸ் அணிக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் கையால் பந்தை கையாண்டதால் எதிரணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைக்க காரணமாக அமைந்தார். இதனால் இந்த ஆட்டத்தில் ஜெர்மனி அணி தோல்வி கண்டு வெளியேறியது. 2004-ம் ஆண்டில் ஜெர்மனி அணியில் அடியெடுத்து வைத்த பாஸ்டியன் ஸ்வெய்ன்ஸ்டீகர் 120 சர்வதேச போட்டியில் விளையாடி இருக்கிறார். 2004, 2008, 2012, 2016-ம் ஆண்டுகளில் அரங்கேறிய ஐரோப்பிய கோப்பை போட்டியில் ஜெர்மனி அணியில் இடம் பிடித்த பாஸ்டியன் ஸ்வெய்ன்ஸ்டீகர் 2014-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற ஜெர்மனி அணியிலும் அங்கம் வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE