ஜேர்மனியில் பணி செய்பவர்களுக்கு குவியும் வருமானம்

219

ஜேர்மனியில் உள்ள Hesse மாநிலத்தில் தான் திறமையான ஊழியர்களும், தொழிலதிபர்களும் அதிகளவு பணம் ஈட்டுகிறார்கள் என தெரியவந்துள்ளது.

StepStone என்னும் வேலைவாய்ப்பு ஆன்லைன் தகவல் மையம் சமீபத்தில் ஜேர்மனியின்வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் குறித்து ஆய்வு நடத்தியது.

அதில், Hesse மாநிலத்தில் தான் திறமையானவர்கள் பணிசெய்கிறார்கள் எனவும் அவர்கள் ஆண்டு வருமானம் சராசரியாக €57,002யாக உள்ளது எனவும் தெரியவந்துள்ளது.

அதே சமயம் Saxony-Anhalt மாநிலத்தில் €37,701 என்ற அளவுக்கு குறைந்த வருமானம் அங்கு வேலை செய்பவர்களுக்கு வருகிறது.

ஜேர்மனியில் மருத்துவம் படித்தவர்களுக்கு €79,500 என்ற சம்பளம் சராசரியாக கிடைக்கிறது. சட்டம் படித்தவர்களுக்கு €74,000 என்ற அளவில் ஊதியம் கிடைக்கிறது.

சாதாரண பட்டப்படிப்பை முடித்தவர்கள் €45,100 என்ற அளவிலேயே சராசரியாக பணம் ஈட்டுகிறார்கள்.

இந்த ஆய்வு கருத்து கணிப்பானது முழு நேர பணியில் இருப்பவர்கள், தொழிலதிபர்கள் என மொத்தம் 50,000 நபர்களிடம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

SHARE