ஜேர்மனியில் முதன் முறையாக ஒரே பாலின திருமணம்..!!

215

ஜேர்மனியில் முதன் முறையாக ஒரே பாலின திருமணம் ஒன்று எதிர்வரும் ஞாயிறு அன்று நடைபெற உள்ளது.

ஜேர்மன் தலைநகர் பெர்லினில் குறித்த திரும்ண நிகழ்வுகள் நடைபெறவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மட்டுமின்றி Hanover, Hamburg உள்ளிட்ட பிற நகரங்களிலும் குறித்த நாள் ஒரே பாலின தம்பதிகள் மோதிரம் மாற்றிக்கொள்கின்றனர்.

கடந்த யூன் 30 ஆம் திகதி ஒரே பாலின திருமணத்திற்கு சட்டப்பூர்வமாக அனுமதி அளிக்கப்பட்டதை அடுத்து ஜேர்மனியில் உள்ள 94,000 ஒரே பாலின தம்பதிகள் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளனர்.

இருப்பினும் ஜேர்மன் அரசாங்கத்தில் குறித்த திருமணத்தை பதிவு செய்துகொள்ளும் வகையில் மென்பொருள் தயாராகவில்லை என்பதால் அதிகாரப்பூர்வ பதிவுக்கு இன்னும் சிலகாலமாகலாம் என கூறப்படுகிறது.

குறித்த பட்டியலில் நெதர்லாந்து நாடு கடந்த 2000 ஆம் ஆண்டில் முதன் முதலில் இணைந்தது. தொடர்ந்து ஸ்பெயின், ஸ்வீடன், பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ஒரே பாலின திருமணத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தன என்பது குறிப்பிடத்தக்கது

SHARE