ஜேர்மனியை அதிரவைத்துள்ள மாணவன்

294

ஜேர்மனியின் மியுனிக் நகரில் வெள்ளிக்கிழமையிரவு 9 பேரைகொலைசெய்த மாணவன் படுகொலைகள் குறித்து தீவிர ஆர்வம்கொண்டிருந்தான்என தெரிவித்துள்ள அதிகாரிகள் அவனிடம் அமெரிக்க பல்கலைகழக படுகொலைகள் குறித்த நூல்ஓன்று காணப்பட்டதுஅவன் கணணியின் துப்பாக்கிசுடும் விளையாட்டுகளை விளையாடினான் என தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கார்டியன் மேலும் தெரிவித்துள்ளதாவது:

துப்பாக்கி தாக்குதலில் உயிரிழந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் பதின்ம வயதினர் ஐவர் 16வயதிற்கு உட்பட்டவர்கள்ஓரே தாக்குதலில் இவ்வளவு இளவயதினர் படுகொலைசெய்யப்பட்டமை ஜேர்மனியின் துயரத்தை மேலும் அதிகரித்துள்ளதுஅமைதியான மாணவன் ஓருவன் ஏன் துப்பாக்கியை பெற்றுக்கொண்டு ஈவிரக்கமற்ற கொலைவெறித்தாக்குதலை மேற்கொண்டான் என்பதற்கான காரணங்களை அறியமுடியாமல் ஜேர்மன் மக்கள் தவிக்கின்றனர்.

குறிப்பிட்ட தாக்குதலை மேற்கொண்ட அலிசொனொபோய் 1990களில் ஜேர்மனிக்கு வந்த ஈரானிய அகதிகளின் மகன்அவன் அமைதியானவன் வன்முறைகள் குறித்த எந்தகுணத்தையும் வெளிப்படுத்தாதவன் என அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.

அவனது வீட்டைபொலிஸார் சோதனையிட்டவேளை பாரியபடுகொலைகள் குறித்த பத்திரிகைகட்டுரைகளையும் நூல்களையும் கண்டுபிடித்துள்ளனர். அதில் மாணவர்கள் ஏன் துப்பாக்கிபிரயோகத்தை மேற்கொள்கின்றனர் என்ற நூலும் காணப்பட்டுள்ளது.

அவன் துப்பாக்கிபிரயோகங்கள் மீது அதிகஆர்வத்தை கொண்டிருந்திருக்கின்றான்என மியுனிக்கின் பொலிஸ் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார். அவன் நோர்வேயின்ஓஸ்லோவில் 77பேரை படுகொலை செய்த வலதுசாரி தீவிரவாதி குறித்து அதிக ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளான் எனவும் அவர் குறிப்பிட்டார்இகுறிப்பிட்ட நோர்வே தாக்குதலின் ஐந்தாவது வருடத்திலேயே ஜேர்மன் தாக்குதலும் இடம்பெற்றுள்ளது.

படுகொலை செய்யப்பட்டவர்களை குறிப்பிட்ட இடத்திற்கு அழைப்பதற்கு சொன்பொலி வேறொருவரின் முகப்புத்தகத்தை பயன்படுத்தியுள்ளான் அந்த முகப்புத்தகத்தை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்த அவன் அனைவரிற்கும் இலவசவிருந்து என அழைப்பு விடுத்து அனைவரையும் குறிப்பிட்ட வணிகவளாகத்திற்கு அழைத்துள்ளான்.

இதேவேளை பாடசாலையில் மாணவர்களால் தொந்தரவுசெய்யப்பட்ட சொன்பொலி ஏனைய இளைஞர்களை வேண்டுமேன்றே இலக்குவைத்தானா என்ற கேள்வியும் அதிகாரிகள் மத்தியில் எழுந்துள்ளது.st01

SHARE