
இந்நகரில் செயல்படாமல் இருந்த சூப்பர் மார்க்கெட் கட்டிடத்தில் உள்ள ஒரு தனி அறையை, சவப்பெட்டிகள் உள்ளிட்ட விற்பனை பொருட்களை பாதுகாப்பதற்காக நபர் ஒருவர் வாடகைக்கு எடுத்துள்ளார்.
இந்நிலையில், கடந்த வாரம் இந்த அறையை பரிசோதனை செய்த பொது சுகாதார அதிகாரிகள், காலியாக வைக்கப்பட்டிருந்ததாக கூறப்பட்ட சவப்பெட்டிகளை திறந்தனர்.
அப்போது, சுமார் 5 சவப்பெட்டிகளுக்குள் பிணங்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும், பிணங்கள் கெடாமல் இருப்பதற்காக சவப்பெட்டிகளுக்குள் குளிர்சாதன வசதியும் செய்யப்பட்டிருந்தது.
பிணங்களை ஆய்வு செய்த Oliver Koehler என்ற அதிகாரி, ஜேர்மனியின் சுகாதார சட்ட விதிகளுக்கு உட்பட்டே பிணங்கள் சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்ததாகவும், அதற்குரிய சரியான ஆவணங்களும் உரிய நபரிடமும் இருந்ததாக தெரிவித்தார்.
இருப்பினும், நகரின் மத்தியில் உள்ள ஒரு கட்டிடத்தில் பிணங்களை வைப்பதற்காக உள்ளூர் அதிகாரியிடம் அந்த நபர் முறையான அனுமதி பெற்றிருக்கிறாரா என சுகாதார துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
மேலும், பிணங்களை கைப்பற்றிய அதிகாரிகள், அவற்றை முறையாக அடக்கம் செய்ய அப்பகுதி கல்லறைக்கு அனுப்பி வைத்தனர்.
கடந்த வாரம் நடைபெற்ற இந்த சம்பவத்தை நேற்று ஜேர்மன் பத்திரிகைகள் வெளியிட்டதால் பெர்லினில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.