ஜேர்மனியில் விவாகரத்து கோரி பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கு விசாரணையின் போது புர்கா அணிந்து இங்கு வரக்கூடாது என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.
ஜேர்மனியின் Brandenburg பகுதியில் உள்ள Luckenwalde நீதிமன்றத்தில், சிரியாவில் இருந்து அகதியாக வந்த இஸ்லாமிய பெண் ஒருவர், தன் கணவருடன் சேர்ந்து வாழமுடியாது எனவும், அதனால் தனக்கு விவாகரத்து வேண்டும் என்று கோரியுள்ளார்.
இதனால் அப்பெண் சார்பாக வழக்கறிஞர் Najat Abokal நீதிமன்றத்தில் வாதாடினார். அப்போது நீதிபதி மத சின்னங்களை குறிக்கும் எதையும் நீதிமன்றத்தில் அணிந்து வரக்கூடாது என்று தடைவிதிக்கப்பட்டுள்ளதாக எழுத்து பூர்வமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதில் இப்பெண் புர்கா அணிந்து வந்துள்ளார். இதனால் முதலில் நீங்கள் உங்கள் புர்காவை நீக்குங்கள். அப்போது தான் சட்டப்படி விசாரணை மேற்கொண்டு விவாகரத்து வழங்க முடியும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.
அரசு உழியர்கள் மற்றும் காவலர்கள் உள்ளிட்டோர் மதங்களை குறிக்கும் எதையும் அணியக் கூடாது என்று தடைவிதிக்கப்பட்டுள்ளது நியாயமான ஒன்று தான், நீதிமன்றத்திற்கு வரும் பொதுமக்களுக்கு இது போன்ற தடை விதிப்பது இது தான் முதல் முறையாக இருக்ககூடும் என்று கூறப்படுகிறது.