ஜே.வி.பியின் முன்னாள் தலைவரும் முக்கியஸ்தருமான சோமவன்ச அமரசிங்க கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

331

 

ஜே.வி.பியின் முன்னாள் தலைவரும் முக்கியஸ்தருமான சோமவன்ச அமரசிங்க கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

கட்சியின் செயற்பாடுகளினால் அதிருப்தியடைந்த சோமவன்ச புதிய கட்சியொன்றை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளார். எனினும், இந்தக்கட்சி ஜே.வி.பியின் போட்டிக்கட்சியல்லவென்றும் அறிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் எமது செய்திச்சேவை, ஜே.வி.பியின் முக்கியஸ்தர் ரில்வின் சில்வாவை தொடர்பு கொண்டு கேட்டபோது, “சகோதரர் சோமவன்ச தனது தனிப்பட்ட முடிவின் பிரகாரம் கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார்.

எனினும், அதனை கட்சி ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. ஏனெனில், அவரது ஆலோசனைகளும், வழிநடத்தல்களும் எமக்கு தொடர்ந்து தேவை.

அவரது விலகல் கட்சியின் பிளவுமல்ல. அவரை மீண்டும் கட்சிக்குள் கொண்டுவர முயற்சிப்போம்” என்றார்.

SHARE