ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க அவன்ட் கார்ட் தொடர்பில் விவாதம் நடத்துவதிலிருந்து விலகிக்கொண்டார் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அவன்ட்கார்ட் சம்பவம் தொடர்பில் பகிரங்க விவாதம் நடாத்த தாம், அனுரகுமார திஸாநாயக்கவை அழைத்ததாகவும் அதிலிருந்து அனுரகுமார தப்பித்துக்கொண்டார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி பிரதமர் ஆகியோரிடம் கூறி இந்த விவாதத்திலிருந்து அவர் தப்பித்துக்கொண்டார் என நீதி அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார். அவன்ட் கார்ட் தலைவர் நிசாங்க சேனாதிபதியின் கடவுச்சீட்டை வழங்கிய சம்பவம் தொடர்பில் தம்மை தொடர்பு படுத்தி அனுரகுமார திஸாநாயக்க வெளியிட்ட கருத்து தொடர்பில் விவாதம் நடத்தத் தயார் என தாம் கூறியிருந்ததாக விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த விவாதத்திற்கு தம்மை அழைக்க வேண்டாம் எனவும் தாம் இதில் பங்கேற்கவில்லை எனவும் ஜனாதிபதி பிரதமர் ஊடாக அனுரகுமார திஸாநாயக்க விவாத்திலிருந்து தப்பித்துக்கொண்டார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.