ஜே.வி.பி.யின் உயிரிழந்த போராளிகளுக்கான அஞ்சலி நிகழ்வு

247
ஜே.வி.பி.யின் உயிரிழந்த போராளிகளுக்கான அஞ்சலி நாளை மாவட்ட மட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

1971ம் ஆண்டு ஏப்ரல் கிளர்ச்சியில் உயிரிழந்தவர்களை நினைவுகூறும் ஏப்ரல் போராளிகள் தினத்தை ஜே.வி.பி. ஆண்டுதோறும் நினைவுகூர்ந்து வருகின்றது.

இதுவரை காலமும் கொழும்பில் மட்டுமே நடத்தப்பட்டு வந்த நினைவுதின வைபவங்கள் இம்முறை மாத்தறை, அநுராதபுரம் நகரங்களிலும் கொழும்பிலும் நடத்தப்பட உள்ளது. அத்துடன் மாவட்ட மட்டத்திலும் நினைவு தின வைபவங்கள் நடத்தப்படவுள்ளன.

கொழும்பில் நடத்தப்படும் வைபவத்தில் அனுரகுமார திசாநாயக்கவும், மாத்தறையில் விஜித ஹேரத்தும், அநுராதபுரத்தில் லால்காந்தவும் சிறப்புரையாற்றவுள்ளனர்.

அத்துடன் ஜே.வி.பி.யில் இருந்து பிரிந்து சென்று வேறு கட்சிகளை ஆரம்பித்துள்ளவர்களும் இந்த வைபவத்தை நினைவு கூறும் வகையில் பல்வேறு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

download

SHARE