முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய இவ்வாறு பிணை வழங்கியுள்ளார்.
லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்பய்பட்ட மனுவொன்று தொடர்பில் இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது. 2010ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரையிலான காலப்பகுதிக்கான சொத்து பொறுப்பு விபரங்கள் வெளியிடப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஜொன்ஸ்டனுக்கு எதிரான குற்றப்பத்திரிகை சில பிழைகள் காணப்படுவதாகவும் அவற்றை திருத்தி விரைவில் மீளவும் சமர்ப்பிக்க உள்ளதாகவும் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் 27ம் திகதி இ;நத மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.