பாகுபலியின் இரண்டு பாகங்கள் இந்திய சினிமாவில் செய்த சாதனைகளை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. இந்த இரு பாகங்களால் இப்படத்தில் ஜோடியாக நடித்த பிரபாஸ்- அனுஷ்கா உலகளவில் பிரபலமடைந்தனர்.
மேலும் இப்படங்களில் ஒன்றாக சேர்ந்து பணிபுரிந்ததினால் இருவருக்கும் இடையே காதல் தீயும் பற்றி கொண்டது. விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் இருவரும் தங்களது காதலின் செய்திகளை மறுத்தனர்.
ஆனால் தற்போது இருவரும் ஜோடியாக தங்களது மிர்ச்சி என்ற பட ப்ரோமோஷனுக்காக ஜப்பான் பறந்துள்ளனர். இவர்களின் இந்த வெளிநாட்டு பயணத்தால் இருவருக்கும் இடையேயான கிசுகிசுக்கள் மீண்டும் தலை தூக்கியுள்ளன.