ஜோதிகாவின் காற்றின் மொழி

502

மொழி திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் ராதா மோகனின் இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள திரைப்படம் காற்றின் மொழி. இப்படத்தில் ஜோதிகா வானொலி தொகுப்பாளராக் நடித்துள்ளார்.

இத்திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ள நிலையில், அதில் ஜோதிகா செய்யும் குறும்புத்தனங்கள் மற்றும் ஹெலோ பண்பலையில் உறவுச் சிக்கல்களை களையும் இரவு நேர நிகழ்ச்சி தொகுப்பாளராக ஜோதிகா மாறியதும், அந்த சூழலுக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொள்ள முயற்சிக்கும் ஒவ்வொரு செயல்பாடுகளும் என சிரிக்கவைக்கும் காட்சிகளாக அவை அமைந்துள்ளன.

“ஹலோ.. ஹலோ என பல முறைகளில் சொல்ல முயற்சிப்பது.. உண்மையான அன்புக்கு முன்னால் என் அன்பு தோத்துப்போச்சு கோபால்.. “என்று பேசுவது, விதார்த்துடன் கரண்டிச் சண்டையில் வெற்றிப்பெறுவது என பல இடங்களில் நம்மை சிரிக்வைத்துள்ளார்.

இந்ததிரைப்படத்தில் விதார்த் ஜோதிகாவின் கணவரக நடித்துள்ளார். லஷ்மி மஞ்சு, சாண்ட்ரா மற்றும் பலர் நடித்துள்ளனர். நடிகர் சிம்பு இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் வருகின்றார். இப்படத்திற்கு ஏ.எச். ஹாஷிப் இசையமைத்துள்ளார். முகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவும், கேஎல்.பிரவீன் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.

SHARE