ஜோர்தான் மன்னர் இரண்டாம் அப்துல்லா கனடாவிற்கு நாளை (14.02.2024) விஜயம் செய்ய உள்ளதாக பிரதமர் ஜஸ்டின் தெரிவித்துள்ளார்.
ஜோர்தான் மன்னரின் கனேடிய விஜயம் தொடர்பில் பிரதமர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மத்திய கிழக்கு நாடுகளில் சமாதானம் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் இரு நாடுகளின் தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
போர் நிறுத்தம் குறிப்பாக காசாவில் பாதிக்கப்பட்டுள்ள சிவிலியன்களுக்கு உதவிகளை வழங்குவது தொடர்பில் விசேடக் கவனம் செலுத்தப்பட உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
1999 ஆம் ஆண்டு பதவி ஏற்று கொண்ட கொண்டதன் பின்னர் ஏழாவது தடவையாக ஜோர்தான் மன்னர் கனடாவிற்கு விஜயம் செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.