நீதிமன்றத்தினால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பொதுபலசேனாவின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் சற்று முன்னர் ஹோமாகம பொலிஸில் சரணடைந்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹோமாகம நீதிமன்ற வளவில் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் நடந்துக்கொண்டமை தொடர்பில் அவரை கைதுசெய்யுமாறு நீதிவான் நேற்று உத்தரவிட்டிருந்தார்
இந்த நிலையிலேயே ஞானசார தேரர் ஹோமாகம பொலிஸில் சரணடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஞானசார தேரர் இன்று கைது செய்யப்படுவாரா?
பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை இன்று (26) முற்பகல் ஆஜராகுமாறு ஹோமாகம பொலிஸார் கேட்டுள்ளனர்.
ஹோமாகம நீதவான் ஞானசார தேரரை கைதுசெய்யுமாறு உத்தரவிட்டமையை அடுத்தே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கோரிக்கைக்கு இணங்க ஞானசார தேரர் ஹோமாகம பொலிஸில் பிரசன்னமானால் அவர் கைதுசெய்யப்படுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போகச்செய்யப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணை இடம்பெற்ற வேளையில் ஞானசார தேரர் அரச அதிகாரிகளை அச்சுறுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே அவரை கைதுசெய்யுமாறு ஹோமாகம நீதவான் உத்தரவிட்டார்.
பிரகீத் எக்னெலிகொட காணாமல் போகச்செய்யப்பட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள அரச புலனாய்வு அதிகாரிகளை விடுவிக்கவேண்டும் என்பதே ஞானசார தேரரின் கோரிக்கையாகும்.