ஞாபகார்த்த சிலை திறப்பு விழா

233

மன்னகுளத்தைப்பிறப்பிடமாகவும் 1ம்வட்டாரம் முள்ளியவளையை வதிவிடமாகவும் கொண்ட அமரர் செல்லையா குணபாலசிங்கம காணிவெளிக்கள உத்தியோகத்தர் பிரதேசச்செயலகம் ஒட்டுசுட்டான் அவர்களின் நினைவாக மன்னகுளம் சந்தியில் நிறுவப்பட்டசிலையை அவரின் பிறந்த தினமான 23.09.2016ம் ஆண்டு கல்லிருப்பு கண்ணகையம்மன் வைரவசுவாமி கோவில் பூசகர் திரு.மு.ச.கணேசலிங்கம்.(சிற்றம்பலம்) அவர்களாலும் வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா அவர்களாலும் அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டு 23.10.2016ம் ஆண்டு சுபவேளையில் கௌரவ வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நடேசு சிவசக்திஆனந்தன் அவர்களினால் இச்சிலை திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் விருந்தினர்களாக கௌரவ வன்னிமாவட்ட பாராளமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் வடமாகாணசபை உறுப்பினர்களான கௌரவ து.ரவிகரன் கௌரவ க.சிவனேசன் கௌரவ இ.இந்திரராசா கௌரவ ச.மயூரன் முன்னாள் பாராளமன்றஉறுப்பினர் வை.பாலச்சந்திரன் வவுனியாவடக்கு பிரதேசசபை செயலாளர் கந்தசாமி சத்தியசீலன் மன்னகுளம் பகுதி கிராமசேவையாளர் பிரதீபா ஓட்டுசுட்டான் பிரதேசசெயலக உத்தியோகத்தர்கள் கனகராயன்குளம் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ்நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுஅமைப்புக்களின் தலைவரகள் செயலாளர்கள் அதிபரகள், ஆசிரியர்கள் சிறுவர்நன்நடத்தை உத்தியோகத்தர் ஜெ.கெனடி மற்றும் உறவினர்கள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து சிறப்பித்த இன்நிகழ்வில் அன்னாரது நினைவாக தேசியமட்டத்தில் வெற்றிபெற்ற கனகராயன்குளம் மகாவித்தியாலய மாணவி நா.ரிஷாந்தினி மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்காளான கணேசலிங்கம் அபிசன் புதுக்குளம் பண்டிதமணி வித்தியாலயம் சுகேந்திரன் பவிதன் கனகராயன்குளம் ஆரம்ப வித்தியாலயம் விக்கினேஸ்வரன் ஓவியா சுரேஸ்குமார் கலைப்பிரியன் குறிசுட்டகுளம் அ.த.க.பாடசாலை ஆகியவர்களுக்கான கௌரவிப்பும் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல்உபகரணங்களும் கௌரவ வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா அவர்களால் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

unnamed-8

unnamed-7

unnamed-6

SHARE