டக்ளஸ் தேவானந்தா அவர்களை விக்னேஸ்வரனின் நூல்வெளியீட்டு நிகழ்விற்கு அழைத்து, சபை நாகரீகமின்றி பேசிய விக்னேஸ்வரன்
மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்று சொல்லிக்கொண்டு அரசின் முகவர்களாக செயல்படுகிறார்களாம், இப்படி விக்னேஸ்வரன் சொல்லியுள்ளார்.
அவரிடமும், அவரது பக்கவாத்தியங்களிடமும் நான் கேட்பது :
எதிரியாக இருந்தாலும் நாம் அழைத்துவிட்டு பின் அவமானப்படுத்துவது சபை நாகரீகமா? மாகாணசபை பற்றிதான் விக்கிக்கு தெரியவில்லை, நிகழ்வுகளின் சபைபற்றியுமா தெரியாது. பட்டையை மட்டும் பூசிக்கொண்டு காலத்தை ஒப்பேற்றிய நீர், தனியொருவராக நின்று இன்றுவரை மக்களுக்காக மட்டுமே சேவைபுரியும் எமது தோழரை பேசுவதற்கு உமக்கு அருகதையில்லை. உம்மை முதல்வர் பதவியிலிருந்து தூக்கியெறிய ஆளுனரிடம் சென்றவர்கள்தான் இன்று உமதருகில் இருக்கின்றார்கள். முதல்வராகியவுடன் குடும்பத்துடன் (சிங்கள சம்மந்தியோடு) மகிந்தவை சந்தித்து ஆசிபெற்ற நீர், அரசின் முகவர் என்று பிறரை எப்படி சாடுவீர். உங்களது சம்மந்தர் ஐயா, சுமந்திரன் ஐயா இன்றுவரை அரசின் முகவர்கள்தானே. இவர்கள் அரசிற்கு ஆதரவாக கோடிகளை பெற்றனர் என்று உங்கள் (அப்போதைய) பாராளுமன்ற உறுப்பினரே சொல்லியுள்ளாரே. மாகாணசபையை தும்புக்கட்டையால்கூட தொட்டுப்பார்க்க மாட்டோம் என்று சொல்லிய உங்கள் அணி இன்று அதே மாகாணசபையை கைப்பற்றி மலடாக்கவில்லையா? அரசு ஒதுக்கிய நிதியை கொள்ளையிட்ட உங்கள் அமைச்சர்களை நீங்களே பதவி விலகச்செய்து பின் நீங்களே மூடி மறைக்கவில்லையா? அரசால் ஒதுக்கப்பட்ட பணத்தை செயற்படுத்த திட்டமின்றி திருப்பி அனுப்பியது நியாயமா? இதுவரை காலமும் நீங்கள் பதவியேற்று மக்களுக்காக செய்த சேவையை பட்டியலிட முடியுமா? வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தை தமிழ்பகுதியில் கட்டவைக்க திறானி அற்றவர் நீங்கள். இப்படி அடுக்கிக்கொண்டே போகமுடியும்.
அரசின் கைக்கூலிகள் கூட்டமைப்பினரே விக்கினேஸ்வரன் உட்பட. இவர்கள் டக்ளஸ் தேவானந்தாவை சாட தகுதியற்றவர்கள். அரசின் அதிமுக்கிய பதவிகளை தன்வசம் வைத்துக்கொண்டு என்ன கிழிக்கிறார்கள். அங்கயன் என்கிற தமிழனுக்கு பிரதிசபாநாயகர் பதவி கிடைப்பதை பொறுத்துக்கொள்ளாத கூட்டமைப்பு தலைமைகள் நீங்கள்.
தயவுசெய்து வேடம்போடாதீர்கள். தேர்தல் நெருங்கும்பொழுது உங்கள் வீரவசனங்களை விட்டெறிவதுபோல் இம்முறையும் அந்த யுக்தியை கையாளவேண்டாம். மக்கள் விழித்துக்கொண்டனர்.