டயானாவால் ஈர்க்கப்பட்ட இளவரசர் ஹரியின் காதலி

201

டயானாவை முன் மாதிரியாக எடுத்து கொண்டதோடு அவரின் திருமண வீடியோவை இளவரசர் ஹரியின் காதலி மேகன் அடிக்கடி பார்ப்பார் என தெரியவந்துள்ளது.

பிரித்தானியா இளவரசர் ஹரியும், மேகனும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வருகிறார்கள்.

இந்நிலையில், ஹரியின் தாயும் பிரித்தானிய இளவரசியுமான மறைந்த டயானா மீது மேகன் எவ்வளவு மரியாதை வைத்துள்ளார் என தற்போது தெரியவந்துள்ளது.

இது குறித்து மேகனின் பள்ளி தோழி Suzy-ன் தாய் Sonia கூறுகையில், டயானா ஏழை மக்களுக்கு செய்த தொண்டு பணி மேகனையும், Suzy-ஐயும் அதிகம் ஈர்த்தது.

டயானாவை, மேகன் தனது முன் மாதிரியாக தான் பார்த்தார். டயானா போலவே ஏழை குழந்தைகளுக்கு மேகனும், Suzy-ன் உடைகள், விளையாட்டு பொம்மைகளை சேகரித்து கொடுப்பார்கள் என கூறியுள்ளார்.

டயானாவின் அழகுக்கு பதில் அவரின் மனிதாபிமானமே மேகனை ஈர்த்தது.

இதோடு கடந்த 1981ல் சார்லசுக்கும், டயானாவுக்கும் நடந்த திருமண வீடியோவை அடிக்கடி மேகன் எங்களுடன் சேர்ந்து பார்த்து கொண்டேயிருப்பார் என Suzy கூறியுள்ளார்.

 

SHARE