இளவரசி டயானாவின் காதலர் Dodi Fayed போதை மருந்துகளை அதிகம் பயன்படுத்துபவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியா இளவரசி டயானாவும் அவரது காதலர் Dodi Fayed-ம் சேர்ந்து காரில் பயணம் செய்யும் போது ஏற்பட்ட விபத்தில் இருவரும் பலியானார்கள்.
மிக பெரிய கோடீஸ்வரரான Dodi Fayed குறித்த முக்கிய விடயங்களை அவரின் நண்பரும், இரவு நேர கேளிக்கை விடுதியின் உரிமையாளருமான Mark Fleischman தான் எழுதியுள்ள புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதில், Quaaludes மற்றும் cocaine ரக போதை மருந்துகளை Fayed விரும்பி உட்கொள்வார் என எழுதியுள்ளார்.
மேலும், தன்னுடைய இரவு விடுதிக்கு வருவதை Fayed வழக்கமாக கொண்டவர் எனவும் தானும் Fayed-ம் சேர்ந்து ஓரினசேர்க்கையாளர்கள் மட்டும் கலந்து கொள்ளும் சட்ட விரோதமான கேளிக்கை விருந்துகளுக்கு செல்வோம் எனவும் Mark குறிப்பிட்டுள்ளார்.
இதோடு, Fayed-க்கு அழகான பெண்களை அதிகம் பிடிக்கும் எனவும் ரகசியமாக கேளிக்கை விருந்துகள் நடக்கும் இடங்களை நாங்கள் தேடி அலைவோம் எனவும் Mark புத்தகத்தில் எழுதியுள்ளார்.