டயானா உயிருக்கு போராடிய கடைசி நிமிடங்கள்காப்பாற்றாமல் போட்டோ எடுத்த நபர்கள்

257

விபத்து நடந்த பின்னர் கார் உள்ளே உயிருக்கு போராடிய டயானாவை காப்பாற்றாமல் புகைப்படக் கலைஞர்கள் அவரை புகைப்படம் எடுத்தார்கள் என இளவரசர் ஹரி கூறியுள்ளார்.

பிரித்தானியா இளவரசி டயானா கடந்த 1997ல் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். காதலருடன் டயானா காரில் சென்று கொண்டிருக்கும் போது பின்னாடியே அவரை புகைப்படம் எடுக்க ஏராளமான புகைப்பட கலைஞர்கள் துரத்தி வந்தார்கள்.

இதையடுத்து சுரங்கபாதையில் வேகமாக கார் சென்ற நிலையில் மோதி விபத்துக்குள்ளானது.

டயானா உயிரிழந்து 20 ஆண்டுகள் ஆகவுள்ள நிலையில், அவர் மகன்களான ஹரி மற்றும் வில்லியம் தாய் குறித்து ஆவணப்படத்தில் பேசி வருகிறார்கள்.

இளவரசர் ஹரி கூறுகையில், என் தாய் சென்ற காரை துரத்தி சென்ற புகைப்பட கலைஞர்கள் கார் விபத்துக்குள்ளானதும் அவரை காப்பாற்ற முயலவில்லை.

அதற்கு பதிலாக இரக்கமின்றி பின் சீட்டில் இருந்த அவரை புகைப்படம் எடுத்தார்கள் என கூறியுள்ளார்.

இளவரசர் வில்லியம் கூறுகையில், தாய் டயானா எங்கு சென்றாலும் புகைப்படம் எடுக்க ஒரு கூட்டம் அங்கு சென்றுவிடும்.

அவர் ஒரு இடத்திலிருந்து வெளியில் வந்தால் அங்கு அவரை போட்டோ எடுக்க தயாராக இருப்பார்கள், இதன் காரணமாக டயானா பல சமயம் மிகவும் மனம் வருந்துவார் என கூறியுள்ளார்.

SHARE