எய்ட்ஸ் நோய் பாதித்த நோயாளிகளை பார்த்து பலரும் பயந்து ஒதுங்கிய காலகட்டத்தில் கையுறை அணியாமல் அவர்களிடம் டயானா சகஜமாக பழகியது தெரியவந்துள்ளது.
பிரித்தானியா இளவரசி டயானா தான் வாழ்ந்த காலத்தில் தொண்டு பணிகளை மிகவும் விரும்பி செய்தவர் ஆவார்.
டயானாவின் சகோதரர் சார்லஸ் பேட்டி ஒன்றில் டயானா குறித்து பேசியுள்ளார்.
அவர் கூறுகையில், கடந்த 1987ஆம் ஆண்டு டயானா லண்டனில் எய்ட்ஸ் நோய் பாதித்த மக்களை காண சென்றிருந்தார்.
அப்போது ஒரு எய்ட்ஸ் நோயாளியுடன் கையுறை அணியாமலேயே அன்பாக கை கொடுத்து டயானா பேசியதாக கூறியுள்ளார்.
அந்த காலகட்டத்தில் எய்ட்ஸ் நோய் பாதித்தவர்களை தொட்டால் நமக்கும் நோய் தொற்றி விடும் என வதந்திகள் பரப்பப்படுவதுண்டு. ஆனால் இளவரசி டயானா அதை பொருட்படுத்தாமல் தனது மனித நேயத்தை காட்டியுள்ளார்.
சார்லஸ் மேலும் கூறுகையில், டயானா மிகவும் உண்மையானவராகவும், மனித தொடர்புகளை மதிப்பவராகவும் இருந்தார்.
சமுதாயத்தில் துன்பப்படுகிறவர்களுடன் உடன் இருந்து நாம் உதவ வேண்டும் என்பதை தான் டயானா நோயாளியை தொட்ட நிகழ்வின் மூலம் சொல்லாமல் சொல்லியுள்ளார்.
எய்ட்ஸ் நோய் மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தாது. நோய் பாதிப்பு உள்ளவர்களுடன் கை குலுக்கலாம், கட்டி அணைக்கலாம் எனவும் டயானா ஒரு முறை கூறியதாக சார்லஸ் தெரிவித்துள்ளார்.