அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா வனராஜா பிரதேசத்தில் 16.11.2015 அன்று இரவு 9 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் படுங்காயத்திற்குள்ளாகியுள்ளனர்.
அட்டனிலிருந்து நோர்வூட் பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்று அட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் டிக்கோயா வனராஜா பிரதேசத்தில் பிரதான வீதியை விட்டு விலகி 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூன்று இளைஞர்களும் மற்றும் முச்சக்கரவண்டியின் சாரதியும் இவ்வாறு படுங்காயங்களுக்குள்ளாகி டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வைத்தியா்கள் தெரிவித்தனா்.
குறித்த முச்சக்கரவண்டியின் வேகத்தைகட்டுப்படுத்த முடியாததன் காரணமாகவே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக அட்டன் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனா்.