டிரம்ப்-மோடி சந்திப்பின்போது, டிரம்பின் மனைவி மெலினா ஆடையின் விலை தெரியுமா?

233

பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். முதல் முறையாக வெள்ளை மாளிகை சென்ற மோடியை, அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா சிரித்த முகத்துடன் வரவேற்றனர்.

அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி நேற்று அந்நாட்டு அதிபர் டிரம்பை சந்திக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகை சென்றார். அங்கு மோடிக்கு சிவப்பு கம்பளத்துடன், சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

டிரம்ப் மனைவி மெலனியா வெள்ளை மாளிகையில் இருந்து வெளியே வந்து மோடியை வரவேற்றார்.

அதனைத் தொடர்ந்து வெள்ளை மாளிகையில் அமெரிக்கா அதிபர் டிரம்ப்- பிரதமர் மோடி முன்னிலையில் இருநாட்டு குழுக்கள் பேச்சுவார்த்தை நடத்தின.

பின்னர் இருவரும் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அப்போது கேமிராவின் கவனத்தை டிரம்ப்பின் மனைவி மெலானியா பெற்றுக்கொண்டார்.

அவர் அணிந்திருந்த மஞ்சள் நிற உடை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

அந்த மஞ்சள் நிற மலர் உடையின் விலை 1,39,180 ரூபாயாகும். இதனை பிரபல ஆடை வடிவமைபாளர் எமிலியோ பூசி வடிவமைத்துள்ளார்.

மேலும் இச்சந்திப்பின் போது, இந்தியாவுக்கு டிரம்ப் குடும்பத்துடன் வருகை தர வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

இதை ஏற்ற டிரம்ப், மகள் இவான்காதான் இந்தியா செல்ல மிகவும் ஆர்வமுடன் இருப்பதாக கூறினார்.

SHARE