டிரெஸ் குட்டையாக இருப்பதாக சொல்லி நாமினேஷன்.. சர்ச்சையில் சிக்கிய பிக்பாஸ் விசித்ரா

116

 

பிக் பாஸ் 7ம் சீசனில் முதல் வார நாமினேஷன் நடந்து முடிந்திருக்கிறது. அதில் மொத்தம் 7 பேர் நாமினேட் ஆகி இருக்கின்றனர்.

நாமினேஷன் செய்யும் போது பலரும் பல்வேறு காரணங்களை கூறினார்கள். Strong போட்டியாளராக இருக்கிறார், ஓவராக attitude உடன் பேசுகிறார் என பலரும் பல்வேறு காரணங்களை கூறினார்கள்.

சர்ச்சையில் விசித்ரா
விசித்ரா நாமினேஷன் செய்யும் பொது ஐஷு என்ற போட்டியாளர் சின்ன உடைஅணிந்து இருக்கிறார், உட்காரும் விதம் சரியில்லை என்றெல்லாம் சொல்லி நாமினேட் செய்திருக்கிறார்.

“இங்கே வயசில் குறைந்தவர்களும் இருக்கிறார்கள், வயது அதிகமானவர்களும் இருக்கிறார்கள். அதனால் ஆடை விஷயத்தை கவனிக்கவேண்டும்” என விசித்ரா கூறி இருக்கிறார்.

விசித்ராவுக்கு தற்போது சமூக வலைத்தளங்களில் கண்டனம் எழுந்திருக்கிறது. ஆரம்பகாலத்தில் விசித்ரா கிளாமராக இருக்கும் புகைப்படங்களை ஷேர் செய்து ட்ரோல் செய்து வருகின்றனர்.

SHARE