டி20 உலகக்கிண்ணத்தை வெல்ல அவுஸ்திரேலியாவுக்கு உதவும் இந்திய வீரர்!

276

எதிர்வரும் டி20 உலகக்கிண்ணத் தொடரில் அவுஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வெல்ல அந்த அணிக்கு உதவுகிறார் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீதரன் ஸ்ரீராம்.

இதற்கான ஒப்பந்ததில் அவர் ஏற்கனவே கையெழுத்திட்டுள்ளார். ஏற்கனவே அவுஸ்திரேலிய ஏ அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது அந்த அணிக்கு உதவி உள்ளார்.

இந்நிலையில் இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக்கிண்ணத்தில் அவுஸ்திரேலிய அணிக்கு பல ஆலோசனைகளை வழங்கவிருக்கிறார்.

உலகக்கிண்ணப் போட்டிகளுக்கு இன்னும் 5 மாதங்கள் இருக்கும் நிலையில், தற்போதே பயிற்சியை தொடங்கி விட்டது அவுஸ்திரேலியா.

ஸ்ரீதரன் ஸ்ரீராமின் ஆலோசனைகளும் அணிக்கு உத்வேகத்தை அளிக்கும் என்று அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

மேலும், ஐபிஎல் தொடரில் விளையாடி அனுபவம் பெற்ற அவுஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக் ஹசியும் ஸ்ரீராமுடன் இணைந்துள்ளார்.

2000- 2004 ஆண்டுகளில் இந்திய அணியில் விளையாடிய ஸ்ரீராம், 8 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE