அடுத்த வருடம் நடக்கவிருக்கும் டி20 உலகக்கிண்ணத்தில் இந்தியா தான் சாம்பியன் பட்டம் வெல்லும் என்று முன்னாள் அவுஸ்திரேலிய வீரர் ஷேன் வார்னே தெரிவித்துள்ளார்.டி20 உலகக்கிண்ணப் போட்டிகள் இந்தியாவில் அடுத்த வருடம் மார்ச் 15 முதல் ஏப்ரல் 3ம் திகதி வரை நடக்கிறது.
கடந்த 2007ம் ஆண்டு நடந்த முதல் டி20 போட்டியில் டோனி தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
இந்நிலையில் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள டி20 உலகக்கிண்ணப் போட்டியிலும் டோனி தலைமையிலான இந்திய அணியே கிண்ணம் வெல்ல வாய்ப்பிருப்பதாக ஷேன் வார்னே தெரிவித்துள்ளார்.
மேலும், ராஜஸ்தான் றொயல்ஸ் அணியின் தலைவராகவும் பயிற்சியளராகவும் இருந்த ஷேன் வார்னிடம் பயிற்சியாளர் பணி தொடர்பாக கேட்ட போது, சர்வதேச அணிகளின் பயிற்சியாளர் பணியை எதிர்நோக்கி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

|