மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் பங்கேற்ற டி20 தொடரில் 120 சிக்ஸர்கள் அடித்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் கடந்த 2022 ஆம் ஆண்டு பல்கேரியா மற்றும் செர்பியா நாடுகளுக்கு இடையேயான போட்டியில் 97 சிக்சர்கள் அடிக்கப்பட்டது சாதனையாக இருந்து வந்தது.
இந்த நிலையில் மேற்கிந்திய தீவுகள் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி அங்கு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடியது. இந்த இரண்டு தொடர்களிலும் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது.
ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும், டி20 தொடரை 3-2 என்ற கணக்கிலும் மேற்கிந்திய தீவுகள் அணி கைப்பற்றியது.
இதனிடையே சர்வதேச டி20 போட்டிகளில் இதுவரை படைக்காத புதிய சாதனையை இங்கிலாந்து, மேற்கிந்திய அணிகள் படைத்துள்ளன. இந்த தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணி 64 சிக்சர்களும், இங்கிலாந்து அணி 56 சிக்சர்களும் என மொத்தம் 120 சிக்ஸர்கள் அடித்துள்ளன.
இதன் மூலம் ஒரே தொடரில் அதிகபட்ச சிக்சர்கள் அடித்து, இரு அணிகளும் சாதனை படைத்துள்ளன.
இறுதிப் போட்டியில் அடைந்த தோல்வி குறித்து பேசிய இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர், இந்த இந்த சிக்சர்களின் எண்ணிக்கை குறித்து குறிப்பிட்டு, இதனால்தான் தங்கள் அணி தோற்றதாக பேசியிருந்தார்.
மேற்கு இந்திய தீவுகள் அணி உலக கோப்பை தொடருக்கு தேர்வாகாவிட்டாலும் கூட, டி20 உலக கோப்பை போட்டியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.