டுவென்டி-20 உலகக் கிண்ணப் போட்டியில் ஸ்டார்க் அவுட்

265

2016ம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் டுவென்டி-20 உலகக் கிண்ணப் போட்டியில் அவுஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் பங்கேற்கமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது அவுஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கு காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து தற்போது ஸ்டார்க் அறுவைசிகிச்சை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்.

இதுகுறித்து அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கூறுகையில், அறுவை சிகிச்சை முடிந்த பிறகே, காயத்தில் இருந்து இருந்து குணமடைந்து கிரிக்கெட் களம் திரும்புவதற்கு எவ்வளவு நாட்கள் ஆகும்? என்பதை தெளிவாக சொல்ல முடியும்.

ஆனால் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் நடக்கும் 20 ஓவர் உலக கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் அவர் விளையாட வாய்ப்பில்லை என்று அறிவித்துள்ளது.

SHARE