டெங்குநோய் தொற்றும் அபாயம்

389

நுவரெலியா மாவட்டத்தில் 2013-2015 ஆண்டு காலப்பகுதியில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரும் இல்லை. இருப்பினும் 2013ல் நுவரெலியா மாவட்டத்தை தவிர ஏனைய மாவட்டங்களிற்கு டெங்கு நோய் பரவியிருந்ததாக தகவல்கள் மஸ்கெலியா வைத்திய அதிகாரியின் காரியாலயத்தில (M.O.H) பதிவாகியுள்ளது. மேலும் 2014ம் ஆண்டில் இப்பகுதியில் இருந்து சென்று வெளி மாவட்டங்களில் பணிபுரிந்த 7 பேருக்கு நோய் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக மஸ்கெலிய வைத்திய அதிகாரி காரியாலயத்தில் பதிவாகியுள்ளது. இவ்வாண்டில் இன்றைய திகதி வரை (26.01.2015) 4 பேருக்கு டெங்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது.

நுவரெலிய மாவட்டத்திலுள்ள மஸ்கெலிய, சாமிமலை, நல்லதண்ணி, பொகவந்தலாவ, நோவுட், டிக்கோயா, ஹட்டன், தலவாக்கலை, நானுஓயா, கொத்மலை, நுவரெலியா, கந்தபொல ஆகிய பகுதியில் டெங்கு நோய் பரவும் அபாயம் இல்லை. இருப்பினும் வெளி மாவட்டங்களில் பணிபுரியும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு வரும் நோயாளிகளை பிரதேச வைத்திய அதிகாரிகளின் நேரடி கன்காணிப்பில் மூலம் சிகிச்சை மேற்கொள்ளப்படுவதாக மஸ்கெலிய வைத்திய அதிகாரியும், மஸ்கெலிய சுகாதார வைத்திய அதிகாரியும் தெரிவித்தனர்.                                              செ.தி.பெருமாள்

02.kapakame  05.people house

06.part of house  07.inside house

SHARE