டெங்கு குடம்­பிகள் காணப்­பட்­டதால் ஹோட்டல் உரி­மை­யா­ள­ருக்கு அப­ராதம்

229

 

டெங்கு குடம்­பிகள் காணப்­பட்­டதால் ஹோட்டல் உரி­மை­யா­ள­ருக்கு அப­ராதம்

பூகொடை நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றின் சுற்­றுப்­புற சூழலில் டெங்கு குடம்­பிகள் காணப்­பட்­ட­தனால் ஹோட்டல் உரி­மை­யா­ள­ருக்கு 10 ஆயிரம் ரூபா அப­ராதம் செலுத்­தும்­படி பூகொடை மஜிஸ்­திரேட் நீதி­மன்ற நீதிவான் செல்வி நிலு­புளி லங்­கா­புர கட்­ட­ளை­யிட்டார்.

பூகொடை சுகா­தார உத்­தி­யோ­கத்தர் சம்பத் திஸா­நா­யக்­க­வினால் இவர் பூகொடை மஜிஸ்­திரேட் நீதி­மன்­றத்தில் ஆஜர் செய்­யப்­பட்­ட­போதே மேற்­கண்­ட­வாறு நீதிவான் கட்­ட­ளை­யிட்டார்.

இதே­வேளை, டெங்கு நுளம்­பு­கள் உற்­பத்­தி­யாகும் வகையில் வீட்டுத் தோட்­டத்தை வைத்­தி­ருந்த குற்­றத்­திற்கு 12 பெண்கள் உட்­பட 28 பேருக்கு பூகொடை மஜிஸ்­திரேட் நீதி­மன்ற நீதிவான் செல்வி நிலு­புளி லங்­கா­புரி ஒரு­வ­ருக்கு தலா 1000 வீதம் 28 ஆயிரம் ரூபா அப­ராதம் விதித்தார்.

பூகொடை பொலி. மண்­டா­வல, கந்­த­கொ­ல்ல, கம்­பொல கெதர போன்ற பிர­தே­சங்­களில் மேற்­கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்களுக்கு எதிராக பூகொடை மஜிஸ்திரேட் அபராதம் விதித்தார்.

SHARE