டெங்கு நோயால் இதுவரை 45 பேர் மரணம்!

278

இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் டெங்கு நோய் காரணமாக 45 பேர் மரணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய்ப் பிரிவின் வைத்திய நிபுணர் ஹசித திசேரா தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாடளாவிய ரீதியில் 26,500 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 8,600 பேர் டெங்குவினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தற்போது நிலவிவரும் சீரற்ற காலநிலையினால் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

SHARE