டெட் குருஸ் ஜனாதிபதி வேட்பாளர் பதவிக்கான போட்டியிலிருந்து விலகல்:

288
டெட் குருஸ் ஜனாதிபதி வேட்பாளர் பதவிக்கான போட்டியிலிருந்து விலகல்:

அமெரிக்காவின் குடியரசு கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் நோக்கில் பிரச்சாரம் செய்துவந்த டெட் குருஸ் அந்தப் பிரச்சாரங்களிலிருந்து விலகிக்கொண்டுள்ளார்.

இந்தியானாவில் மற்றுமொரு வேட்பாளரான டொனால்ட் ட்ரம்பிடம் தோல்வியைத் தழுவியதனைத் தொடர்ந்து அவர் இவ்வாறு விலகிக் கொண்டுள்ளார்.

இதன்படி நியூயோர்க்கைச் சேர்ந்த வர்த்தகரான ட்ராம்ப் பெரும்பாலும் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, ஜனநயாக கட்சியின் சார்பில் ஹிலரி கிளின்ரன் முன்னிலை வகித்து வருகின்றார்.

இன்னும் பல தொகுதிகளில் பிரச்சாரப் பணிகள் பூர்த்தியாகா நிலையில் குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சிகளின் வேட்பாளர்கள் யார் என்பது தீர்மானமாகவில்லை.

SHARE