உலக இறுதி டென்னிஸ் தொடரில் அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸை வீழ்த்திய உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
தரவரிசையில் டொப் – 8 இடங்களைப் பிடித்த வீராங்கனைகள் மோதிய இத் தொடரில் லீக் சுற்றின் முடிவில் ஸ்லோன் ஸ்டீபன்ஸ்
ஸ்விடோலினா இறுதிக்கு தகுதி பெற்றனர்.
இந்தப் போட்டியில் முதல் செட்டை 3–6 என்ற கணக்கில் இழந்த ஸ்விடோலினா, அடுத்த 2 செட்களையும் 6-–2, 6–-2 என்ற கணக்கில் கைப்பற்றி சம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.