டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

494

இந்தியாவின் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சோயிப் மலிக்கிற்கும் இன்று காலை ஆண் குழந்தையொன்று பிறந்துள்ளது.

இந்தியாவின் ஐதராபாத்திலுள்ள தனியார் வைத்தியசாலையில் வைத்தே சானியா மிர்சா ஆண் குழந்தையை ஈன்றெடுத்துள்ளார். இத் தகவலை சோயிப் மாலிக் தனது டுவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் வெளியிட்டுள்ளார்.

வைத்தியசாலையில் சானியாவுடன் அவரது பெற்றோர் மற்றும் கணவர் சோயிப் மாலிக் உடனிருந்து கவனித்து வருகின்ற நிலையில், சானியா மிர்சா- சோயிப் மாலிக்கிற்கு டுவிட்டரில் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

SHARE