
டெலிகிராம்
டெலிகிராம் செயலியில் வாய்ஸ் கால் அறிமுகம் செய்யப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் தற்சமயம் வீடியோ கால் அம்சம் இந்த ஆண்டு வழங்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக டெலிகிராம் பீட்டா பதிப்பில் வீடியோ கால் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
புதிய வீடியோ கால் அம்சம் டெலிகிராம் 7.0.0 வெர்ஷனில் வழங்கப்பட்டுள்ளது. இந்த அப்டேட்டில் வீடியோ கால் மட்டுமின்றி அனிமேட்டெட் எமோஜி அம்சமும் வழங்கப்பட்டு உள்ளது.

இந்த அம்சத்தில் பிக்சர் இன் பிக்சர் மோட் வழங்கப்பட்டு உள்ளது. இதை கொண்டு பயனர்கள் டெலிகிராம் சாட்களில் ஸ்கிரால் செய்வதுடன், வீடியோவை பாஸ் செய்யாமல் மல்டி-டாஸ்கிங் செய்யும் வசதி வழங்கப்படுகிறது. அனைத்து அழைப்புகளும் முழுமையான என்க்ரிப்ஷன் செய்யப்படுகிறது.
வீடியோ கால் அம்சத்துடன் புதிய அனிமேட்டெட் எமோஜி அம்சம் ஆல்ஃபா அம்சமாக ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் பதிப்புகளில் வழங்கப்படுகிறது. டெலிகிராம் செயலியில் க்ரூப் வீடியோ கால் செய்வதற்கான வசதி எதிர்காலத்தில் வழங்கப்படும் என தெரிகிறது.