டெஸ்டில் சிக்ஸர் அடித்து சதம்! 179 ரன்கள் குவித்து சாதனைப்பட்டியலில் இணைந்த ஜெய்ஸ்வால்

119

 

இங்கிலாந்துக்கு எதிராக சதம் விளாசிய யஷஸ்வி ஜெய்ஸ்வால், முதல் நாளில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் இணைந்துள்ளார்.

இந்தியா 336 ஓட்டங்கள்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்கியது.

நாணய சுழற்சியில் வென்று துடுப்பாட்டத்தை தெரிவு செய்த இந்திய அணி, முதல் நாள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 336 ஓட்டங்கள் குவித்துள்ளது.

தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 179 ஓட்டங்கள் விளாசி களத்தில் உள்ளார். 94 ஓட்டங்களில் இருந்த அவர் சிக்ஸர் அடித்த சதம் விளாசினார். அவரது ஸ்கோரில் 5 சிக்ஸர், 17 பவுண்டரிகள் அடங்கும்.

விரேந்தர் சேவாக் (228, 195, 180), வாசிம் ஜாஃபர் (192), ஷிகர் தவான் (190) ஆகியோருக்கு அடுத்த இடத்தில் ஜெய்ஸ்வால் உள்ளார்.

SHARE