டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஜெரோம் டெய்லர் ஓய்வு

257

மேற்கிந்திய தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜெரோம் டெய்லர் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் ஜெராம் டெய்லர்.

இதுவரையில் 46 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 130 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

இந்நிலையில் தற்போது டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டித் தொடரில் இவர் இடம்பெறாததே இந்த முடிவுக்கு காரணம் என தெரிகிறது.

எனினும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

625.500.560.350.160.300.053.800.748.160.70 (3)

SHARE