டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியில் இருந்து வெளியேறிய வீரர் – வெளியான காரணம்

28

 

பங்களாதேஷ் அணிக்கெதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இருந்து இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் கசுன் ராஜித்த காயம் காரணமாக வெளியேறியுள்ளார்.

கசுன் ராஜித்தவிற்கு பதிலாக அசித்த பெர்ணாண்டோ ஸ்ரீலங்கா அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

அணியில் இருந்து வெளியேறிய வீரர்
கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான 2 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றதுடன், அந்தப் போட்டியில் கசுன் ராஜித்த எட்டு விக்கெட்டுக்களை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு பாரிய பங்களிப்பை வழங்கியிருந்தார்.

இந்த நிலையில் இடது பக்க மேல் முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதால், 2 ஆவது டெஸ்ட் போட்டியில் அவரால் விளையாட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக இயல்புநிலையை மீட்டெடுக்கும் பயிற்சிகளுக்காக கசுன் ராஜித்த நாடு திரும்பவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதனிடையே பங்களாதேஷ் அணியிலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், மூத்த வீரர் ஷஹீப் அல் ஹசன் 2 ஆவது போட்டியில் விளையாடவுள்ளார்.

டாக்கா பிறிமியர் லீக் தொடரில் சிறப்பான ஆட்டத்தை ஷஹீப் அல் ஹசன் வெளிப்படுத்தியமை, பங்களாதேஷ் அணிக்கு பலமாக அமையும் என கிரிக்கெட் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதனிடையே இரண்டாவது போட்டியின் போது பங்களாதேஷ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்க அணியுடன் இருக்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் அவுஸ்திரேலியா செல்லவுள்ளதாக கூறப்படும் நிலையில், துணைப் பயிற்றுவிப்பாளர் அணியின் பயிற்றுவிப்பு பொறுப்புக்களை ஏற்பார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE