டெஸ்மன் சில்வா அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை: பிரதமர்

250
டெஸ்மன் சில்வா அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

காணாமல் போனோர் பற்றிய விசாரணைகளில் டெஸ்மன் சில்வாவின் உதவி பெறப்பட்டதாக கடந்த காலங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

எனினும் அவ்வாறான அறிக்கை வெளியிடப்படவில்லை. டெஸ்மன் சில்வாவுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது அவர் கூறியதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

ஜெனிவா யோசனை தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் விவாதத்தில் பிரதமர் இதனை கூறியுள்ளார்.

ஜெனிவா யோசனை தொடர்பில் நாடாளுமன்றத்தில் அமைச்சர்கள் சிலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் அமைச்சர் விஜேதாச ராஜபக்ச கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

அதேவேளை தேசிய ஐக்கியத்தை கட்டியெழுப்ப கடந்த அரசாங்கத்திடம் தான் யோசனை திட்டம் ஒன்றை முன்வைத்ததாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் ஜெனிவா யோசனை தொடர்பான விவாதம் மாலை 6.30 வரை நடைபெறவுள்ளதுடன் நாளைய தினமும் நடைபெற உள்ளது.

SHARE