அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி பராக் ஒபாமாவின் பதவிகாலம் வரும் 20ஆம் திகதியுடன் நிறைவடைகிறது. அன்றே புதிய ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்கிறார்.
இந்நிலையில் நேற்று நாட்டு மக்களுக்கு ஒபாமா ஆற்றிய நன்றி உரையில், மக்களாகிய உங்களிடம் இருந்து தான் நான் எல்லாவறையும் கற்றேன். நீங்கள் தான் என்னை சிறந்த ஜனாதிபதியாக உருவாக்கினீர்கள்.
நான் ஆட்சியில் இருந்த இந்த எட்டு ஆண்டுகளில் அமெரிக்காவில் தீவிரவாத செயல்கள் எதுவும் பெரிதாக நடக்கவில்லை.
இனவெறி என்னும் பிரிவினை சக்தி இன்னும் இங்கு உள்ளது என கூறிய அவர் புதிய ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்கும் போது நிதி சம்மந்தமாக எந்தவொரு பிரச்சனையும் இருக்காது.
அமெரிக்காவில் இஸ்லாமியர்களுக்கு எதிரான பாகுபாட்டு உணர்வை முற்றிலும் நிராகரிக்க வேண்டும் என பேசியுள்ளார்.
அப்போது ஒபாமாவின் ஆதரவாளர்கள் மேலும் 4 ஆண்டுகள் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததை மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.