டொலரின் மதிப்பு அதிகரிப்பினால் இலங்கையில் ஏற்படவுள்ள நெருக்கடி!

250

dolar-ve-euro

டொலரின் மதிப்பு அதிகரிப்பதன் காரணமாக இலங்கையில் பொருட்களின் விலை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த தகவலை நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ரூபாயினை பாதுகாப்பதற்காக டொலர் விற்பனை செய்யப்படுவதன் காரணமாக வெளிநாட்டு இருப்புக்கள் குறைவடைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியின் இறுதியில் டொலரின் பெறுமதி 131 ரூபாவாக காணப்பட்டதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதுவரையில் இலங்கையில் 8.2 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு இருப்புக்கள் இருந்ததாகவும், தற்போது அது வரையில் 6 பில்லியன் அமெரிக்க டொலராக குறைவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டினுள் பாரிய நிதி நெருக்கடி ஒன்று உருவாகியுள்ளதாக கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

SHARE