டோனிக்கு அடுத்த சவால்: அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணி தெரிவு எப்போது?

271

அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணி நாளை மறுதினம் தெரிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி எதிர்வரும் ஜனவரி மாதம் அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.

இதற்காக ஜனவரி 6ம் திகதி அவுஸ்திரேலியாவுக்கு புறப்படும் இந்திய அணி, அங்கு ஜனவரி 12ம் திகதி முதல் 31ம் திகதி வரை இந்த தொடரில் விளையாடுகிறது.

இதற்கான இந்திய அணி நாளை மறுதினம் (சனிக்கிழமை) டெல்லியில் தெரிவு செய்யப்பட உள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அண்மையில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் டோனி தலைமையிலான இந்திய அணி தோற்றது. இதனால் டோனி மீது விமர்சனங்கள் எழுந்தது.

இந்நிலையில் அவுஸ்திரேலியாவில் நடக்கும் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் வெற்றி பெற்று தனது திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் டோனி இருக்கிறார்.

SHARE