டோனிக்கு இப்படி உள்ள பெண்களைத் தான் அதிகம் பிடிக்குமாம்! படத்தில் இடம் பெறாத சில ரகசியங்கள்.

208

625-500-560-350-160-300-053-800-748-160-70-11

படத்தில் டோனி பற்றி தெரியாத சில ரகசியங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் பல்வேறு சாதனைக்களுக்கு சொந்தக்காரர் டோனி. தற்போது அவருடை வாழ்க்கையை சித்தரித்து எம்.எஸ்.டோனி. தி அன் டோல்டு ஸ்டோரி என்ற திரைப்படம் வெளியாகியுள்ளது.

படம் வெளியான இரண்டே நாட்களில் ரூ.41 கோடி வசூல் செய்தது. படத்தில் டோணி பற்றி ரசிகர்களுக்கு தெரியாத சில விஷயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளம் வயதில் டோனிக்கு கால்பந்து தான் பிடிக்குமாம். கிரிக்கெட் பிடிக்காதம். கிரிக்கெட் பந்தை வைத்து எப்படி விளையாடுவது என டோனி அவரின் கிரிக்கெட் பயிற்சியாளரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அதன் பின்னரே அவர் கோல்கீப்பராக இருந்த டோனியை கிரிக்கெட் அணியில் விளையாட இடம் கொடுத்துள்ளார்.

ஹெலிகாப்டர் ஷாட் அவருடைய சொந்த ஷாட் இல்லையாம். அவருடைய நெருங்கிய நண்பர் தான் சொல்லிக் கொடுத்தாராம்.

டோனி இந்திய அணிக்கு வருவதற்கு முன்னே யுவராஜ் சிங்கை தெரியுமாம். இருவரும் நெருங்கிய நண்பர்களாம். இந்திய அணிக்கு தேர்வு செய்ய நடத்தப்பட்ட போட்டிகளில் டோணி அணி, யுவராஜ் அணிக்கு எதிராக விளையாடியுள்ளதாம்.

ஓடிஐ அணியில் இருந்து கங்குலி மற்றும் டிராவிட் நீக்கப்பட்டதற்கு டோனி தான் காரணமாம். 2011 ஆம் ஆண்டு உலககோப்பையை இந்திய அணி இளம் வீரர்களுடன் உள்ள அணியுடனே விளையாடுவதற்காக டோனி இப்படி எல்லாம் செய்தாராம்.

தான் ஒரு பெரிய கிரிக்கெட் வீரர் என்று தெரியாத பெண்களைத்தான் டோனிக்கு ரெம்பவும் பிடிக்குமாம். டோனியின் முன்னாள் காதலியான பிரியங்காவுக்கு டோனி யார் என்றே தெரியாமல் தான் பேசினாராம்.

இதே போல் தான் சாக்ஷிக்கும் டோனியை சந்தித்து பேசிய போது யார் என்றே தெரியாதாம்.

625-0-560-320-500-400-194-800-668-160-90-11

SHARE