டோனியா.. கோஹ்லியா? இங்கிலாந்து தொடரில் இந்த சாதனையை படைக்கப் போவது யார்?

153

இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரான டோனி மற்றும் கோஹ்லிக்கு இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் ஒரு சவால் காத்திருக்கிறது. இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, மூன்று ஒருநாள் போட்டி, 5 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று விளையாடவுள்ளது. கோஹ்லி தலைமையிலான இந்திய அணி வெளிநாட்டு மண்ணில் அதுவும் இங்கிலாந்தில் சாதிக்குமா என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்கள் பலரிடையே எழுந்துள்ளது.

இந்நிலையில் இந்த தொடரில் கோஹ்லி- டோனிக்கு ஒரு சவால் காத்திருக்கிறது.  இந்திய அணியை பொறுத்தவரை டோனி ஒருநாள் போட்டியில் 9,967 ஓட்டங்கள் எடுத்துள்ளார். இன்னும் அவருக்கு 33 ஓட்டங்களே தேவை என்பதால், இந்த தொடரில் 10,000 ஓட்டங்களை நிச்சயம் எடுத்துவிடுவார் என்று நம்பப்படுகிறது. அதே சமயம் இந்திய அணியின் தலைவரான கோஹ்லி டோனிக்கு அடுத்த நிலையில் உள்ளார். இவர் 9,588 ஓட்டங்கள் எடுத்துள்ளார். இவருக்கு இன்னும் 412 ஓட்டங்கள் தேவை என்பதால் அதுவும் நடப்பதற்கு வாய்ப்பிருக்கிறது.

கிரிக்கெட்டை பொறுத்தவரை எதுவேண்டும் என்றாலும் நடக்கலாம் என்பதால், இந்த 10,000 ஓட்டங்களை முதலில் அடிக்கப் போவது கோஹ்லியா, டோனியா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். மேலும் இந்திய அணியில் சச்சின்(18,426), கங்குலி(11,363), டிராவிட்(10,889) ஆகியோர் 10 ஆயிரம் ஓட்டங்களை கடந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE