டோனியிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளவேண்டும்: சொல்கிறார் கோஹ்லி

237

விளையாட்டு வரலாற்றில் டோனிதான் சிறந்த அணித்தலைவர் என்று கோஹ்லி புகழ்ந்து பேசியுள்ளார்.

இந்தியாவில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை டி20 உலகக்கிண்ண போட்டி நடைபெறுகிறது.

இந்தப்போட்டியில் இடம்பெற்றுள்ள அணிகள் விளையாடவிருக்கும் இடங்கள் இன்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட கோஹ்லி பேசியதாவது, விளையாட்டு வரலாற்றில் சிறந்த அணித்ததலைவர்களில் ஒருவர் மகேந்திர சிங் டோனி.

அமைதி மற்றும் இக்கட்டான நிலையில் பதற்றம் அடையாமல் இருப்பது ஆகிய விடயங்களை அவரிடம் இருந்து கட்டாயம் கற்றுக்கொள்ள வேண்டும்.

மற்ற அணித்தலைவர்கள் படைத்த சாதனைகள் எதையும் டோனி முறியடிக்காமல் இல்லை. 2007-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் இந்திய கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய சாதனை.

டி20 பற்றி யாவரும் அறிந்திருக்காத காலத்தில் உலகக்கிண்ணத்தை வென்றது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சாம்பியன் டிராபியை வென்றது எளிதல்ல. அது நம்மைப்பற்றி பெருமைப்படுத்தும் உணர்வாக தெரிகிறது என்று கூறியுள்ளார்.

SHARE