டோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டை பெவிலியன் நோக்கி பறக்கவிட்ட ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித்கான்

158

டோனியின் பிரபலமான ஹெலிகாப்டர் ஷாட்டை டி10 போட்டியில் அடித்து அசத்தியுள்ளார் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித்கான்.

உலகின் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் ரஷித்கான்.

இவர் தற்போது நடைபெற்று வரும் டி10 தொடரில் மராத்தா அரேபியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

நேற்று நடைபெற்ற போட்டியில் மராத்தா அரேபியன்ஸ் அணியும், பக்தூன்ஸ் அணியும் மோதியது. இப்போட்டியில் பக்தூன்ஸ் அணி வெற்றி பெற்றது. ஆனால் ரஷித்கானின் பேட்டிங் இதில் சிறப்பாக இருந்தது.

அவர் இர்பான் வீசிய பந்தை ஹெலிகாப்டர் ஷாட்டில் பெவிலியன் நோக்கி பறக்கவிட்டார்.

இதையடுத்து ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

SHARE