டோனி இந்த நாட்டை ஆள வேண்டும் தமிழ் திரைப்பட இயக்குநரின் பதிவு!

234

இயக்குநர் விக்னேஷ் சிவன் இந்திய கிரிக்கெட் வீரர் டோனி இந்த நாட்டை ஆளும் நாளை காண காத்திருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

’போடா போடி’, ‘நானும் ரவுடி தான்’, ‘தானா சேர்ந்த கூட்டம்’ படங்களை இயக்கியவர் விக்னேஷ் சிவன். இவர் சமீபத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் டோனியை சந்தித்தார்.

அவருடன் எடுத்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள விக்னேஷ் சிவன், அதன் கீழ் சர்ச்சைக்குரிய வகையில் டோனி நாட்டை ஆள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

அவர் அதில் கூறுகையில், ‘இந்த மனிதரை சந்தித்ததன் மூலம் எனது வாழ்நாள் கனவு நிறைவேறிவிட்டது. இது என் வாழ்வில் மிகவும் மகிழ்ச்சிகரமான தருணம். இந்த நிகழ்வை ஏற்படுத்திய கடவுளுக்கு நன்றி’ என தெரிவித்துள்ளார்.

மேலும் டோனி தனது ரோல்மொடல் எனவும், அவர் இந்த நாட்டை ஆளும் நாளைக் காண காத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதற்கு டோனியின் ரசிகர்கள் அவர் ஆட்சி செய்ய வருமாறு அழைப்பு விடுத்து கமெண்ட் செய்துள்ளனர்.

 

SHARE