டோனி படம் எப்போது?

302
டோனியின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படம் வெளியாகும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.இந்திய கிரிக்கெட் அணியின் சாதனை தலைவரான டோனி, இந்திய அணிக்கு 2 உலகக்கிண்ணங்களை வென்று கொடுத்தவர்.

கடந்த ஆண்டு அவர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டநிலையில், தற்போது டி20 மற்றும் ஒருநாள் போட்டி தலைவராக உள்ளார்.

இந்த நிலையில் அவரது வாழ்க்கை வரலாறு பற்றி ’சொல்ல மறந்த கதை ’(M.S. Dhoni – The Untold Story) என்ற பெயரில் திரைப்படம் ஒன்று தயாராகிறது.

நீரஜ் பாண்டே இயக்கத்தில் தயாராகியுள்ள இந்த படத்தில் சுவாந்த் சிங் ராஜ்புத் (டோனி), கயாரா அத்வானி (சாக்க்ஷி), அனுபம் கெர் (டோனி தந்தை) ஆகியோர் நடிக்கின்றனர்.

ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படம் எதிர்வரும் 2016ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 2ம் திகதி வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE