டோனி, ரெய்னாவை பிரிச்சு மோத விட்டுடாங்களே.. கதறும் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள்

279

ஐபிஎல் தொடரில் புதிய அணிகளில் இடம்பெற்றுள்ள வீரர்கள் பற்றி ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை டுவிட்டரில் பகிர்ந்து வருகின்றனர்.

ஐபிஎல் சூதாட்ட வழக்கில் சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு பதிலாக புனே, ராஜ்கோட் அணிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த புதிய அணிகளுக்கு சென்னை, ராஜஸ்தான் ஆகிய இரு அணிகளிலும் உள்ள டாப்-5 வீரர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

அதன்படி, புனே அணியில் டோனி, ரஹானே, அஸ்வின், ஸ்டீவ் சுமித், டுபிளசி இடம்பெற்றுள்ளனர்.

அதே போல் ராஜ்கோட் அணியில் ரெய்னா, ஜடேஜா, மெக்குல்லம், பால்க்னர், பிராவோ ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இது தொடர்பாக டுவிட்டரில் ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

ஒருவர் கூறுகையில், “டோனி, ரெய்னா, மெக்குல்லம், பிராவோ எல்லாரையும் பிரிச்சுடாங்களே.. மைண்ட் செட்டே மோசம போச்சு.. இனி எந்த பீப்பிக்கு ஐபிஎல் பாக்கனும்” என்று கதறியுள்ளார்.

டோனிக்கு பதிலாக சஞ்சு சாம்சனை தெரிவு செய்திருக்கலாம். டோனியின் திறமை குறைந்து விட்டதாக ஒருவர் தெரிவித்துள்ளார்.

மற்றொருவர் கூறுகையில், ”10 வீரர்களில் 7 பேர் சென்னையில் இருந்தும் 3 பேர் மட்டுமே ராஜஸ்தான் அணியில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இது சென்னை அணியின் மேலாதிக்கத்தை காட்டுகிறது” என்று கூறியுள்ளார்.

”ரெய்னாவும், டோனியும் மோதிக்க போறாங்க.. இதை பார்க்கவே செம ஜாலியாக இருக்கும்” என்று ஒருவர் கூறியுள்ளார்.

ராஜ்கோட்டின் அணித்தலைவர் யார் என்பதை பார்க்க ஆவலாக இருப்பதாக ஒருவர் தெரிவித்துள்ளார்.

டோனி சிறந்த அணியை தெரிவு செய்துள்ளதாகவும், அஸ்வின், ரஹானே போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் இருப்பதாகவும் ஒருவர் கூறியுள்ளார்.

டோனியும், ரெய்னாவும் ஐபிஎல் தொடர் தொடங்கியதில் இருந்து ஒரே அணியில் விளையாடி வந்தவர்கள்.

தற்போது 8 ஆண்டுகளுக்கு பிறகு முதன் முறையாக வேறுவேறு அணிகளுக்காக ஆடுகின்றனர்.

SHARE